Asianet News TamilAsianet News Tamil

டெங்குவை கட்டுப்படுத்த ரூ. 30 கோடி தேவை - மத்திய குழுவிடம் முதல்வர் வேண்டுகோள்...!

Pondicherry Chief Minister Narayanasamy has appealed to the Central Committee to grant Rs 30 crore for the first phase to control the dengue and the purchase of immunization devices.
Pondicherry Chief Minister Narayanasamy has appealed to the Central Committee to grant Rs 30 crore for the first phase to control the dengue and the purchase of immunization devices.
Author
First Published Oct 15, 2017, 8:02 PM IST


டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக ரூ.30 கோடி வழங்க வேண்டும் எனவும் நோய் தடுப்பு சாதனங்கள் வாங்க நிதி வழங்குமாறும் மத்தியக்குழுவிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குனர் கல்பனா பர்வா உள்ளிட்ட 5 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் டெங்கு பாதிப்பு குறித்து தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய குழு புதுச்சேரி தலைமை செயலகத்தில் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, ஜிப்மர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம் ஆகியவற்றுக்கு சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது, டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக ரூ.30 கோடி வழங்க வேண்டும் எனவும் நோய் தடுப்பு சாதனங்கள் வாங்க நிதி வழங்குமாறும் மத்தியக்குழுவிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios