Asianet News TamilAsianet News Tamil

சிறுநீரைக் குடிக்க வைத்து சித்ரவதை.. கிரிக்கெட் மட்டை உடையும் வரை அடி உதை.. கர்நாடக போலீஸ் அராஜகம் அம்பலம்..

கைதிகளுக்கு குடிக்க தண்ணீருக்கு பதிலாக சிறுநீரை கொடுத்தும், இசுலாமிய கைதிக்கு தாடியை மழித்தும் பெங்களுரு போலீஸ் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்

Police torcher by giving urine to drink
Author
Bangalore, First Published Dec 8, 2021, 6:50 PM IST

கைது செய்யப்படும் இளைஞர்கள் குடிக்க  தண்ணீருக்கு பதிலாக சிறுநீர் கொடுத்து சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெங்களுருவில் நடந்துள்ளது. பெங்களுரு நகரத்தின் பியந்தனபுரா காவல் நிலையத்தில், தௌசிஃப் பாஷா என்ற வாலிபருக்கு தான் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று, அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 23 வயது பாஹாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை விடுவிக்க பெற்றோரிடம் லஞ்சம் கேட்டத்தாகவும், அதனைக் கொடுக்காத ஆத்திரத்தில் பாஷா கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறுகின்றார் அவரது தந்தை அஸ்லாம். கிரிக்கெட் மட்டையால் 30 முறைக்கும் மேல் அடித்து துன்புறுத்திய போலீஸாரிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டுள்ளார் டௌசிஃப் பாஷா. ஆனால் அதற்கு பதிலாக சிறுநீரை பிடித்து வாயில் ஊற்றி சித்ரவதை செய்துள்ளனர் பியந்தனபுரா கால்வல்துறையினர். அதுமட்டுமின்றி, தௌசிஃப் பாஷாவின் தாடியை மழித்துள்ளனர். தனது மத நம்பிக்கை சார்ந்த விஷயத்தை அவமதிக்காதீர்கள் என்று கெஞ்சியும், காவல்நிலையத்தில் மதமெல்லாம் இல்லை என்று கூறி தாடி மழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

Police torcher by giving urine to drink

இதனை கேள்விப்பட்டு உடனடியாக காவல்நிலையத்துக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஸமீர் அகமது, பலத்த காயங்களுடன் பாஷாவை மீட்டுள்ளார். பாஷா பெங்களுரு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் இன்றைய தினம் நடவடிக்கை எடுத்துள்ள பெங்களுரு காவல்துறை சம்பத்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரீஷ் மற்றும் இரண்டு காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் துறை ரீதியில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெங்களுரு காவல் நிலையங்களில் இது போன்ற கொடூரங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. கடந்த மாதம் 22ஆம் தேதியன்று பெங்களூர் போலீசாரால்  கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தாகத்தில் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு சிறுநீர் கொடுத்தார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதே போல கடந்த செப்டம்பர் மாதம் கைதான இளைஞர் ஒருவரும் இதே புகாரை சொல்லியிருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios