Asianet News TamilAsianet News Tamil

ரயில் நிலையத்தில் முதியவரை கொடூரமாக தாக்கிய போலீஸ்… வைரலாக பரவும் வீடியோ... அடுத்து நடந்தது என்ன?

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

police suspended after video of hitting elderly man video gone viral
Author
Madhya Pradesh, First Published Jul 29, 2022, 8:18 PM IST

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவரை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுக்குறித்து வெளியான வீடியோவில், ஆனந்த் மிஸ்ரா என்ற போலீஸ் கான்ஸ்டபிள், முதியவரின் முகத்தில் உதைப்பதையும், அவரை குத்துவதையும் காணலாம். மேலும் போலீஸ் கான்ஸ்டபிள், அந்த நபரை ரயில்வே பிளாட்பாரத்திலிருந்து கால்களை பிடித்து இழுத்து சென்று ரயில் தண்டவாளத்தில் வீசும் வகையில் அவரை தொங்கவிடுவதை காணலாம்.

இதையும் படிங்க: அடேங்கப்பா.! முதல்வரின் மகன் பிறந்தநாளுக்கு வராத அரசு ஊழியர்கள்..நோட்டீஸ் அனுப்பிய அரசு

இந்த வீடியோவை அங்கு நின்றுக்கொண்டிருந்த ரயிலுக்குள் இருந்த பயணிகளில் ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே முதியவரை அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ வெளியானதை அடுத்து, ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தியபோது, ரேவா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆனந்த் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: பணம் நகையுடன் மாயமான நடிகை அர்பிதா முகர்ஜியின் 4 சொகுசு கார்கள்.??? வலைபோட்டு தேடும் அமலாக்கத்துறை.

இந்த சம்பவத்தை அடுத்து மிஸ்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரதிமா படேல் தெரிவித்தார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், ரயில்வே ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் முதியவரை தொடர்ந்து பலமுறை சரமாரியாக தாக்கிய போதிலும், பயணிகள் ஊமை பார்வையாளர்களாக நின்று முழு செயலையும் வீடியோ எடுக்கின்றனர். ஆனால் அந்த நபரை போலீசார் தாக்குவதை யாரும் தடுக்க முன்வரவில்லை என்று கூறியதோடு இந்த செயலுக்கு போலீஸ் கான்ஸ்டபிளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.   

Follow Us:
Download App:
  • android
  • ios