Police Raid in Bangalore

ரவுடி வீட்டில் 40 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள்… அதிர்ச்சியில் வருமான வரித்துறை…

பெங்களூருவில் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் நடந்த வருமான வரித்துறைனிரின் சோதனையில் 40 கோடி ரூபாய் செல்லாத நோட்டுக்கள் க்கப்ற்றப்பட்டன.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த தொழில் அதிபர் உமேஷ் என்பவரை கடத்திய சிலர் அவரது குடும்பத்தினரிடம் இருந்தது 50 லட்சம் ரூபாய் பணம் பறித்தனர்.

இந்த கடத்தல் வழக்கில் பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான அனுமந்தநகரை சேர்ந்த பாம் நாகராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதேபோல அவர் மேலும் பலரை மிரட்டி பணம் பறித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது..

இதனையத்து 20–க்கும் மேற்பட்ட போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டு திறக்க மறுத்தனர்.

இதனால் வீட்டின் ஜன்னலை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். ஒரு அறையில் இருந்த அவரது மனைவி லட்சுமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


வீட்டில் பூட்டியிருந்த சில அறைகளையும், பாம் நாகராஜின் அலுவலகத்தையும் மாற்று சாவி மூலம் திறந்து சோதனையிட்டதில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 40 கோடி ரூபாய் சிக்கியது.


போலீஸ் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பாம் நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 40 கோடி ரூபாய் அளவுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை அவர் ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.