Asianet News TamilAsianet News Tamil

அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் முத்தலாக் தெரிவித்த நபர்.. அதிரடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை!!

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துபாயில் இருந்து வாட்ஸ் அப்  மூலமாக முத்தலாக் கூறிய நபர் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். 

police filed case on a man for giving muthalak via whatsup
Author
Bengaluru, First Published Sep 20, 2019, 3:13 PM IST

இசுலாமிய மார்க்கத்தில் விவாகரத்து செய்ய முத்தலாக் என்கிற நடைமுறை இருக்கிறது. அதன்படி ஒரு ஆண் மூன்றுமுறை தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இது இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து முத்தலாக் நடைமுறையை இந்தியாவில் தடை செய்ய தீவிர முயற்சி எடுத்து வந்த மத்திய அரசு, சமீபத்தில் அதற்கு சட்டம் இயற்றியது.

இதைதொடர்ந்து தடையை மீறி முத்தலாக் முறையை பின்பற்றி விவாகரத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

police filed case on a man for giving muthalak via whatsup

கர்நாடக மாநிலம் சிவமொக்கவைச் சேர்ந்தவர் இஸ்லாமிய பெண் பாத்திமா(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரது வயது 40 . இவருக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவருடைய கணவர் துபாயில் இருக்கும் சார்ஜாவில் வேலைபார்த்து வருகிறார்.

அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவியை பார்த்து செல்வார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அதனால் ஒரு பெண் குழந்தையை பாத்திமா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேலைக்காக துபாய் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பாத்திமா தனது கணவருடன் போனிலும் வாட்ஸப்பில் அடிக்கடி பேசி வந்திருக்கிறார். இடையில் குடும்ப பிரச்சனைகள் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

police filed case on a man for giving muthalak via whatsup

இதனால் அவரது கணவர் பாத்திமா உடன் வாழ மறுத்து அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறார். அவர் துபாயில் இருந்தபடி வாட்ஸப் மூலம் 'தலாக் தலாக் தலாக்' என்று மூன்று முறை குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டும் முத்தலாக் என தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னுடைய கணவர் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுத்திருக்கிறார். அவரின் புகாரின் அடிப்படையில் புதிய முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் துபாயில் இருக்கும் அவர் கணவர் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர். மேலும் அவரது கடவுசீட்டை முடக்கி அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் முத்தலாக் நடைமுறை இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios