கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 குழுக்களுடன் நாளை(நவ 30ம் தேதி) காணொலி மூலம் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுவரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மையங்கள், விஞ்ஞானிகளை சந்தித்து தடுப்பு மருந்து வளர்ச்சி பணிகளை தீவிரமாக ஆய்வு செய்வதுடன், அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துவருகிறார் பிரதமர் மோடி.

அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய 3 இடங்களுக்கும் சென்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், நாளை ஜென்னேவோ பயோஃபார்மா, பயாலஜிகல் ஈ, டாக்டர்.ரெட்டி’ஸ் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த குழுக்களுடன் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் கேட்டறிகிறார் பிரதமர் மோடி.