பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி 2 முக்கியமான நிகழ்வுகளில் உரையாற்றுகிறார். 28ம் தேதி டெல்லி காரியப்பா மைதானத்தில் நடக்கும் என்சிசி பேரணியில் கலந்துகொள்கிறார். என்சிசி அணிவகுப்பு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளை பார்வையிடுவதுடன், அங்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தலைவர், 3 ஆயுதப்படை சேவைகளின் தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

அதைத்தொடர்ந்து உலக பொருளாதார மன்ற மாநாட்டின் காணொலி காட்சிமூலம் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். சர்வதேச அளவில் 400க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அந்த மாநாட்டில் காணொலி காட்சிமூலம் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, தொழில்நுட்பத்தை மனித நலனுக்கு பயன்படுத்துவது குறித்து உரையாற்றுகிறார். அந்த நிகழ்வின்போது, பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.