கன்னியாகுமரியில் நடந்த பரப்புரை கூட்டத்தின் போது பிரதமர் மோடி கூறியிருந்தவாறு இன்று அவர் பேசிய உரையானது AI மூலமாக தமிழில் வெளியிடப்படப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக சார்பில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இனி, எனது உரையை தமிழில் கேட்கலாம். நான் உங்களிடம் தமிழில் பேசுவேன் என்று கூறியிருந்தார். தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாவிட்டாலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலமாக இனி எனது அனைத்து உரைகளையும் நீங்கள் தமிழ் மொழியில் கேட்கலாம் என்று மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், நமோ இன் தமிழ் என்ற எக்ஸ் தளம் உருவாக்கப்பட்டு, பிரதமரின் பேச்சு தமிழில் வெளியாகி இருக்கிறது. இனிமேல் பிரதமர் மோடியின் பேச்சு அனைத்தும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…