பான் ஐஐடி யூ.எஸ்.ஏ அமைப்பின் மாநாட்டில், கொரோனாவிற்கு பிந்தைய உலகை கட்டமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பான் ஐஐடி யூ.எஸ்.ஏ என்ற அமைப்பு ஐஐடி முன்னாள் மாணவர்களால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டுவருகிறது. 2003ம் ஆண்டிலிருந்து அந்த அமைப்பின் சார்பில் சர்வதேச உச்சிமாநாடு நடத்தப்பட்டுவருகிறது. பல்துறை நிபுணர்களும் தலைவர்களும் இந்த மாநாட்டில் உரையாற்றுவார்கள்.
பில்கேட்ஸ், நாராயண் மூர்த்தி, பில் கிளிண்டன், சசி தரூர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்றியிருக்கின்றனர். “எதிர்காலம் இப்போது” என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் உலக பொருளாதாரம், தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி ஆகிய பல விவகாரங்கள் குறித்து பேசப்படவுள்ளது.
ஐஐடி முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் பான் ஐஐடி யூ.எஸ்.ஏ(PanIIT USA) உச்சி மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் எல்லாம் இந்தியாவின் மகன்கள், மகள்கள். நீங்கள் மனிதத்திற்கு சேவையாற்றி கொண்டிருக்கிறீர்கள். புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய உங்களது ஆர்வம், உலகம் பெரிய கனவுகளை காண உதவியிருக்கிறது.
பான் ஐஐடி இயக்கம், இந்தியாவிற்கு நீங்கள் திருப்பி கொடுக்க நினைப்பதன் அளவுகோலை இன்னும் உயர்த்தி அமைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்களது ஜூனியர்களை ஊக்குவிக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இன்றைக்கு அவர்களில் பெரும்பாலானோர் சொந்த முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். 75 ஆண்டுகால நமது சுதந்திரத்தை எப்படி குறிக்க வேண்டும் என்பதற்கான உங்களது ஆலோசனைகளை கொடுங்கள். MyGov போர்ட்டல் அல்லது நரேந்திர மோடி ஆப் ஆகியவற்றில் உங்களது கருத்துகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
நமது இன்றைய செயல்பாடுகள் நாளைய உலகை மாற்றியமைக்கும். கொரோனாவிற்கு பிந்தைய உத்தரவு, மறுகற்றல், மறுசிந்தனை மற்றும் மறுகண்டுபிடிப்பு குறித்ததாக இருக்கும். பொருளாதார சீர்திருத்தங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
புதிய உலகத்தை கட்டமைப்பதற்கான வழிகளை நீங்கள் ஆலோசித்து, விவாதித்து உங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பொறுப்பு மிகக்கடினமானது தான். ஆனால் நீங்கள் எல்லாரும் அந்த கடினமான பொறுப்பை சுமக்க தகுதியானவர்கள் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 4, 2020, 10:42 PM IST