Asianet News TamilAsianet News Tamil

மோடியால் எனக்குள் பாசிட்டிவ் எனர்ஜி! பா.ஜ.க.விடம் நெருங்கும் சூப்பர் ஸ்டார்!

மோடியை சந்தித்து மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் தனக்குள் பாசிட்டிவ் எனர்ஜி நீடிப்பதாகவும், தன் வாழ்நாளில் மோடியை போன்று தீர்க்கமான ஒரு மனிதரை சந்தித்தது இல்லை என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கூறியுள்ளார்.

Pm Narendra Modi positive energy...Malayalam cinema supe
Author
Delhi, First Published Sep 23, 2018, 11:06 AM IST

மோடியை சந்தித்து மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் தனக்குள் பாசிட்டிவ் எனர்ஜி நீடிப்பதாகவும், தன் வாழ்நாளில் மோடியை போன்று தீர்க்கமான ஒரு மனிதரை சந்தித்தது இல்லை என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கூறியுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் நடிகர் மோகன் லால் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். கேரளாவில் வலுவாக காலூன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பா.ஜ.க., மோகன் லாலை கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசியல் ஆசையில் உள்ள மோகன் லாலும் பா.ஜ.கவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கும் கனவில் உள்ளதாகவும் கூறப்பட்டது. Pm Narendra Modi positive energy...Malayalam cinema supe

கேரளாவில் கணிசமான அளவில் வாக்கு வங்கியை பா.ஜ.க உயர்த்தியுள்ள நிலையில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள மோகன் லாலை கட்சியில் சேர்த்தால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி என்றும் அமித் ஷா கணக்கு போடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை மோகன் லால் சந்தித்ததை மையமாக வைத்தே கடந்த மூன்று வாரங்களாக கேரள அரசியல் சுழன்று வந்தது. இந்த நிலையில் மோடியை சந்தித்தது குறித்து மூன்று வாரங்களுக்குபிறகு மோகன் லால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Pm Narendra Modi positive energy...Malayalam cinema supe

அந்த அறிக்கையில் மோடியை சந்தித்து மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் அவருடனான சந்திப்பின் போது தனக்கு கிடைத்த பாசிட்டிவ் எனர்ஜி நீடிப்பதாக கூறியுள்ளார். மோடி மிகவும் அமைதியாக தான் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதாகவும் மோகன் லால் தெரிவித்துள்ளார். நான் கூறிய அனைத்தையும் மோன் மிகவும் பொறுமையாக கேட்டுக் கொண்டார். என் வாழ்வில் நான் சந்தித்த மிகவும் தீர்க்கமான அமைதியான நபர் மோடி என்றும் மோகன் லால் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். Pm Narendra Modi positive energy...Malayalam cinema supe

ஆனால் தங்கள் சந்திப்பின் போது அரசியல் குறித்து மோடி எதுவும் பேசவில்லை என்று மோகன் லால் கூறியுள்ளார். அதே சமயம் எப்போது விரும்பினாலும் தன்னை வந்து சந்திக்கலாம் என்று மோடி கூறியதை தான் சாதாரண வார்த்தையாக கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 Pm Narendra Modi positive energy...Malayalam cinema supe

விரைவில் மோடியை மறுபடியும் சந்திக்க உள்ளதாகவும் மோகன் லால் கூறியுள்ளார். மோடியுடனான சந்திப்பு குறித்து 3 வாரங்களுக்கு பிறகு மோகன் லால் வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பேசவில்லை என்று மோகன் லால் கூறினாலும் மோடியை அவர் புகழ்ந்து தள்ளயிருக்கும் விதம் அவர் பா.ஜ.கவுடன் நெருங்குவதையே காட்டுவதாக அம்மாநில ஊடகங்கள தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios