டெல்லியில் லோதி மின் மயானத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, அத்வானி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் சுஷ்மா ஸ்வராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியில் கட்சியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பாஜக நிர்வாகிகள், மாநில முதல்வர்கள் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, சுஷ்மா ஸ்வராஜின் இறுதி ஊர்வலம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த அவருக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு அவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.