மகா கும்பமேளாவில் கங்கையில் பால் ஊற்றி பூஜை செய்த பிரதமர் நரேந்திர மோடி!

PM Narendra Modi Mahakumbh 2025 Visit : பிரதமர் மோடி மகா கும்பமேளா 2025ல் கங்கையில் புனித நீராடி, கங்கை தேவிக்கு பால் கொண்டு பூஜை செய்தார். அப்போது அவர் காவி உடை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார்.

PM Narendra Modi Ganga Puja at Maha Kumbhmela 2025 rsk

PM Narendra Modi Mahakumbh 2025 Visit : உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா நிகழ்வானது கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தின் புனித நீராடினர். இந்த நிலையில் தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் கும்ப மேளாவில் புனித நீராடியுள்ளார்.

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு

மகா கும்பமேளா 2025 விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கங்கையில் புனித நீராடி, கங்கை தேவிக்கு பூஜை செய்தார். அப்போது அவர் காவி உடை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்திருந்த பிரதமர் மோடியை பக்தர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். மந்திரங்கள் முழங்க தனியாக கங்கையில் நீராடி, சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்தார்.

கங்கைக்கு பால், சால்வை அர்ப்பணம்

கங்கையில் நீராடிய பின், பிரதமர் மோடி சங்கமத்தில் கங்கை தேவிக்கு பூஜை செய்தார். பால், சால்வை அர்ப்பணித்து ஆசி பெற்றார். உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

சூரிய பூஜை மற்றும் மந்திர உச்சாடனம்

நீராடிய பின், பிரதமர் மோடி 5 நிமிடங்கள் மந்திர உச்சாடனத்துடன் சூரிய பூஜை செய்தார். ஆன்மீக சூழல் நிறைந்திருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த காட்சியை படம் பிடித்தனர்.

பாதுகாப்பு, சாதுக்கள் சந்திப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி சங்கமம் பகுதியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பிரதமர் மோடி சாதுக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

 

கும்பமேளாவிற்கு 2ஆவது முறையாக வருகை தந்த மோடி:

மகா கும்பமேளா 2025க்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 2ஆவது பயணம். டிசம்பர் 13 அன்று கும்பமேளா ஏற்பாடுகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios