பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது। மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த மசோதா உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசவில்லை. 

இந்நிலையில் முதலில் மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட உடனே இந்த பதிவு நீக்கப்பட்டது. இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து இன்று பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு, டி.வி.யில் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்ற உள்ளார். அப்போது, சிறப்பு அந்தஸ்து நீக்கம், யூனியன் பிரதேசமாக மாற்றியது குறித்து எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது