ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை ஜி20 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: துப்பாக்கி மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களுக்கு தடை... பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

மேலும் இதில் பிரதமர் மோடி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்க உள்ளார். அதுமட்டுமின்றி மற்ற நாட்டு தலைவர்களுடன் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

Scroll to load tweet…

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று தனி விமானம் மூலம் பாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு பாலி பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Scroll to load tweet…