சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.   

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் மோடிஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார். இந்த மாநிலங்களில் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் ஏப்ரல் 8 தமிழகம் வரும் பிரதமர் மோடி, 1260 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை (கட்டம்-1) திறந்து வைக்கிறார். இந்த புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் விமான நிலையத்தின் பயணிகள் சேவை திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் (MPPA) இருந்து 30 MPPA ஆக அதிகரிக்கும். புதிய முனையம் உள்ளூர் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பாகும். அதை தொடர்ந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதேபோல் தாம்பரம் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க: தெலுங்கானா பாஜக தலைவரை தட்டி தூக்கிய கேசிஆர்; கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் 5வது குற்றவாளியாக சேர்ப்பு!!

கோயம்புத்தூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளியில் இருந்து டெமு சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே 294 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 37 கிமீ கேஜ் மாற்றுப் பகுதியையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இதன் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியம்பள்ளியில் இருந்து உண்ணக்கூடிய மற்றும் தொழில்துறை உப்பு இயக்கம் பயன்பெறும். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். சென்னை ஆல்ஸ்ட்ரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், சுமார் 3700 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்களில் மதுரை நகரில் 7.3 கிமீ நீளமுள்ள உயர்மட்ட தாழ்வாரம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 785 இன் 24.4 கிமீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை திறப்பு விழா ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடிகுண்டு... 2வது மனைவியாக மறுத்த பெண்ணை பழிவாங்கிய இளைஞர்

தேசிய நெடுஞ்சாலை-744 இன் சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதை அடுத்து சிறப்பு விமானத்தில் மைசூர் செல்லும் பிரதமர் மோடி,மறுநாள் காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு செல்கிறார். அதை தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கர்நாடகா செல்லும் அவர் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். முன்னதாக தெலங்கானாவில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவதோடு, தெலுங்கானாவில் 11,300 கோடி மதிப்பிலான செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.