புதிய சுற்றுலா திட்டத்தை வெளியிட்ட பிரதமர் மோடி! ஜம்மு காஷ்மீரில் ரூ.6,400 கோடிக்கு புதிய திட்டங்கள்!
பிரதமர் மோடி தனது ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
மார்ச் 7ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு வந்த பிரதமர் மோடி, சுற்றுலாவில் தேசத்தின் துடிப்பை அடையாளம் காணும் வகையில், நாடு தழுவிய முதல் முயற்சியாக ‘தேகோ அப்னா தேஷ் பீப்பிள்ஸ் சாய்ஸ் 2024’ என்ற சுற்றுலாத் திட்டத்தை வெளியிட்டார்.
ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், இயற்கை மற்றும் வனவிலங்குகள், சாகசம் மற்றும் பிற வகைகளில் மிகவும் விருப்பமான சுற்றுலா தலங்களை அடையாளம் காண நாடு தழுவிய இத்திட்டத்தைத் தொடங்குவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
ஐந்தாவதாக உள்ள பிற என்ற பிரிவில் வாக்களிக்கும் தங்களின் தனிப்பட்ட விருப்பமான சுற்றுலாத் தலங்களுக்கு வாக்களிக்கலாம். இத்திட்டம் அறியப்படாத சுற்றுலா தலங்கள், துடிப்பான எல்லைப்புற கிராமங்கள், சுகாதாரச் சுற்றுலாவுக்கா இடங்கள், திருமண சுற்றுலாவுக்கான இடங்கள் போன்றவற்றைக் கண்டறிய உதவலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.
மத்திய அரசின் அதிகாரபூர்வ் இணையதளமான https://www.mygov.in/ மூலம் மக்கள் தங்கள் விருப்பத் தேர்வை பதிவு செய்யலாம்.
எங்க வாழ்க்கையைக் காப்பாற்றிய மோடி! காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்டவர் உருக்கமான பேச்சு!
பிரதமர் மோடி ‘சலோ இந்தியா குளோபல் டயஸ்போரா’ என்ற பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களை இந்தியாவின் தூதர்களாக மாற்றுதல் மற்றும் இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் குறைந்து ஐந்து வெளிநாடு வாழ் இந்திய நண்பர்களையாவது இந்தியாவுக்குப் பயணம் செய்ய ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
3 கோடிக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய சுற்றுலாத் துறைக்கு சக்திவாய்ந்த ஊக்கியாகச் செயல்பட முடியும் எனவும் அவர்கள் இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர்களாக இருப்பார்கள் எனவும் மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ‘முழுமையான விவசாய மேம்பாட்டுத் திட்டம்’ என்ற சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமரின் முதல் காஷ்மீர் பயணம் இதுவாகும். மேலும், இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு