Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி இன்று திருப்பதி பயணம்!

ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி இன்று திருப்பதி செல்லவுள்ளார்

PM Modi to visit tirupati today smp
Author
First Published Nov 26, 2023, 10:47 AM IST | Last Updated Nov 26, 2023, 10:47 AM IST

திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி இன்று திருப்பதி செல்லவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் அவர், நாளை காலை 8 மணிக்கு வெங்கடேசப் பெருமானை தரிசிக்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பிரதாமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் திருமலை செல்லவுள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி, திருமலை திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளார். சுமார் 6 கூட்டங்களிலாவாது அவர் பங்கேற்பார் என தெரிகிறது. மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே  அறிவிக்கப்படவுள்ளன.

விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் சிறுவன்: குடும்பத்தை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிய நெகிழ்ச்சி!

அம்மாநிலத்தில், பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios