Asianet News TamilAsianet News Tamil

புத்தாண்டுக்கு ரூ.2000.. பிரதமர் மோடியின் செயலால் உற்சாகமடைந்த விவசாயிகள்!!

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் பிரதமர் மோடி செலுத்தினார். 

pm modi to release 10th instalment of pm kisan today
Author
India, First Published Jan 1, 2022, 5:01 PM IST

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை அவர்களின் வங்கிக்கணக்குகளில் பிரதமர் மோடி செலுத்தினார். அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் 10வது தவணை நிதியுதவியை காணொலிக் காட்சி மூலம் விடுவித்தார். ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும். பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பயனாக வழங்கப்பட்டு வருகிறது.

pm modi to release 10th instalment of pm kisan today

இது 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த நிதிப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் கவுரவத் தொகை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

pm modi to release 10th instalment of pm kisan today

இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 10வது தவணை நிதியை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடிய பிரதமர், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். சுமார் 10 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை 10வது தவணையாக பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios