Asianet News TamilAsianet News Tamil

தெற்கு ஆசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ.! மாஸ் காட்டிய பிரதமர் மோடி! இதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?

தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

PM Modi to inaugurate Indias first Water Metro in Kochi today
Author
First Published Apr 25, 2023, 12:56 PM IST

இரண்டு நாள் பயணமாக கேரளா வந்துள்ள பிரதமர் மோடி இன்று கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையையும் தொடங்கி வைத்தார்.

கொச்சி நகரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கடலில் உள்ள தீவுகளை இணைக்கும் வகையில் இந்தத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் கடலில் 11 தீவுகளுக்குச் சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரை வழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்படவுள்ளது. 

PM Modi to inaugurate Indias first Water Metro in Kochi today

இந்தத் திட்டத்தை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்த பின்னர் வாட்டர் மெட்ரோ படகு சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. கொச்சி படகுகள் நிறுத்துமிடத்தில் இருந்து புறப்பட்டு நீதிமன்றம், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகு இயக்கப்படவுள்ளது. ரூ.747 கோடியில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம். இந்தப்படகில் குறைந்த கட்டணம் ரூ.20, அதிக கட்டணம் ரூ.40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!

PM Modi to inaugurate Indias first Water Metro in Kochi today

78 கிமீ சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் இருப்பதுபோல் இந்தப்படகில் கழிவறை, ஏசி, உணவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. உலக தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு கேரள அரசும், ஜெர்மனி நாட்டின் முதலீட்டு ஏஜென்சியான KFW இணைந்து சுமார் 1136.83 கோடி ரூபாய் முதலீடு செய்து 78 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகளையும், 38 முணையங்களையும் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

Follow Us:
Download App:
  • android
  • ios