சுயநினைவு இல்லாதவர் ராகுல் காந்தி: பிரதமர் மோடி சாடல்!

ராகுல் காந்தியை சுய நினைவில்லாதவர்  என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்

PM Modi slams opposition including rahul gandhi in varanasi smp

குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உத்தரபிரதேசம் மாநிலம் வாரனாசி வந்துள்ளார். துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் அவரது சிலையை திறந்து வைத்து அவரது 647ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டார். இதையடுத்து, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து, வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை வாரிசு அரசியலும், ஊழலும் தடுத்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், தற்போது இங்கு வளர்ச்சி நடைபெற்று வருவதாக கூறினார். உத்தரப்பிரதேசம் தற்போது மாறி வருகிறது; ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இது பிடிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிர தொகுதி பங்கீடு: உத்தவ் தாக்கரேவுடன் ஒரு மணி நேரம் செல்போனில் பேசிய ராகுல்!

காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் காசி தேசத்திற்கு வந்துவிட்டார் என்றும், காசி மற்றும் உத்திரப்பிரதேச இளைஞர்களை போதைக்கு அடிமையானவர்கள் என அவர் அழைக்கிறார் என்றும் ராகுல் காந்தியை பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். மயக்கம் தெளிந்தவர்கள் என் காசியின் குழந்தைகளை போதைக்கு அடிமையானவர்கள் என்று அழைக்கிறார்கள். வாரிசுகளே, உத்தரப்பிரதேசத்தின் எதிர்காலத்தை இப்போது இங்குள்ள இளைஞர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரை தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. அதன்போது பேசிய ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச இளைஞர்கள் மொபைல் போதை மற்றும் போதைப் பழக்கத்தில் மூழ்கியிருப்பதாகக் குற்றம் சாட்டி பாஜக அரசை விமர்சித்தார். இளைஞர்கள் குடித்துவிட்டு தெருவில் நடனமாடுவதாகவும் அவர் விமர்சித்தார். “வாரணாசியில் இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு இரவில் நடனமாடுவதை நான் பார்த்தேன், உ.பி.யின் எதிர்காலம் குடிபோதையில் உள்ளது.” என்று ராகுல் காந்தி ஆளும் பாஜகவை கடுமையான தாக்கி ராகுல் காந்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios