Rahul Gandhi Manipur Visit |பிரதமர் மோடி மணிப்பூருக்கு வர வேண்டும்! மக்களை பார்வையிட்ட ராகுல்காந்தி கோரிக்கை!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களது கோரிக்கைகளை கேட்டரிந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி & குக்கி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை இயல்பு நிலை திரும்பாமல் இன்னுமும் பல இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
நடந்து முடிந்த 18வது மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு இன்னும் ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்று மக்களை சந்தித்துள்ளார். அண்மையில் கலவரம் நடந்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, சுராசந்த்பூர், மந்தப் மற்றும் துய்பாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.
டோர் மேட்டில் ராகுல் காந்தி படம்.. இந்துக்களுக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலடி.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!
பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் உரையாடிய ராகுல்காந்தி, அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மணிப்பூர் மாநில அரசியல் தலைவர்களையும், மாநில ஆளுநர் அனுஷ்யா உய்கேவை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது.. அதிரடி காட்டிய தனிப்படை போலீஸ்.. பழிக்கு பழியா?