Asianet News TamilAsianet News Tamil

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரம் முன் எப்போதும் இல்லாத புது அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

சத்தீஸ்கரில் இந்த முறை தேர்தல் பிரசாரத்தின் போது, எனது அனுபவங்கள் ஆச்சரியமாகவும், முன்பு எப்போதும் இல்லாதது போலவும் உணர்ந்தேன் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

PM Modi shared his election campaign experience in Chhattisgarh
Author
First Published Nov 15, 2023, 1:04 PM IST | Last Updated Nov 15, 2023, 1:04 PM IST

சத்தீஸ்கர் சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடக்கிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி உச்சகட்ட பிரச்சாரத்தில் நேற்று  ஈடுபட்டு இருந்தார். முதல் கட்ட தேர்தல் கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்து முடிந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தை தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகல் இருந்து வருகிறார். மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

நேற்று பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சார அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். தனது பதிவில், ''சத்தீஸ்கரை சுற்றிலும் சிறந்த எதிரொலியை உணர்ந்தேன். சத்தீஸ்கரின் கடின உழைப்பாளி மக்கள் தங்கள் மாநிலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு , புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய ஆற்றலால் நிறைந்துள்ளனர். தவறான நிர்வாகம் மற்றும் ஊழலின் பிடியில் இருந்து சத்தீஸ்கரை விடுவிக்க முடியுமென்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். பாஜகவால் மட்டுமே சாதிக்க முடியும்.

முட்டாள்களின் ராசாவே... எந்த உலகத்துல இருக்க...! ராகுல் காந்தி பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

அடுத்த சில ஆண்டுகளில் சத்தீஸ்கர் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்று, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் மாநில இளைஞர்கள், வளமான சத்தீஸ்கர் கனவுகளுடன் முன்னேறி வருகின்றனர். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியா என்ற உறுதிமொழியுடன், வளர்ந்த சத்தீஸ்கரின் உறுதிமொழியையும் நான் எடுக்கிறேன். எனது வாழ்நாளின் அடுத்த 25 ஆண்டுகளை வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக, வளர்ந்த சத்தீஸ்கர் அர்ப்பணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். 

மாநிலத்தின் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் நமது வளர்ச்சி மாதிரியுடன் இணைந்திருக்கும் விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது. சத்தீஸ்கர் இளைஞர்களின் இந்த மாற்றம் சிறந்த அத்தியாயத்தை எழுதப் போகிறது. சத்தீஸ்கரில் நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கான கொடியை உயர்த்தி பிடித்துள்ளனர். இன்று, இந்திய பெண்கள் அதிகாரம் பெறும் விதத்தையும், இதன் தாக்கத்தையும் சத்தீஸ்கரில் காண முடிகிறது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது உறுதி. காங்கிரஸின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. மாறாக பாஜகவின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள். பாஜக தனது ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. அனைத்து வகையிலும் பாஜக அரசு உங்களது ஆசைகளை நிறைவேற்றும்'' என்று பதிவிட்டுள்ளார். 

மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. 

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு.. ஆம் ஆத்மி கட்சிக்கு பறந்த நோட்டீஸ்.. தேர்தல் ஆணையம் அதிரடி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios