வரவேற்கக் காத்திருக்கிறேன்! சுனிதா வில்லியம்ஸுக்கு மோடியின் கடிதம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த அவர், செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

PM Modi's Letter to Sunita Williams: India Awaits Her Return sgb

இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாகத் பூமிக்குத் திரும்புவதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், நரேந்திர மோடி சுனிதா வில்லியம்ஸுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவரது சாதனைகளைப் பாராட்டி, அவரது விண்வெளிப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சுனிதா வில்லியம்ஸுக்கு எழுதிய கடிதத்தை விண்வெளி வீரர் மைக் மாசிமினோ மூலம் அனுப்பி வைத்துள்ளார். “நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள்,” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் மாசிமினோவைச் சந்தித்து, இந்தியா மற்றும் இந்திய மக்களின் சார்பில் இந்த கடிதத்தை அவரிடம் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். கடிதத்தில் சுனிதாவின் வலிமையைப் பாராட்டியுள்ள மோடி, அவரது பாதுகாப்பான வருகைக்காகவும் வாழ்த்து கூறியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் என்ன சாப்பிட்டார்?

சுனிதா வில்லியம்ஸும் அவரது சக ஊழியர் புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பும் 17 மணி நேர பயணத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் மோடியின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

கடிதத்தில், மோடி இந்திய மக்கள் சார்பாக சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 140 கோடி இந்தியர்கள் அவரது விடாமுயற்சியையும் மன உறுதியையும் நினைத்துப் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் விண்வெளி வீரர் மைக் மாசிமினோவுடன் நடந்த உரையாடலில், சுனிதா வில்லியம்ஸின் பங்களிப்புகள் பாராட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடனுடனான சந்திப்புகளின்போது சுனிதா வில்லியம்ஸின் நலம் குறித்து விசாரித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். "உங்களைப் பற்றியும் உங்கள் வேலையைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலுக்குப் பிறகு, உங்களுக்கு கடிதம் எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை," என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், இந்தியர்களின் இதயங்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள் என்றும், உங்கள் உடல்நலம் மற்றும் வெற்றிக்கு இந்தியர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வில்லியம்ஸின் குடும்பத்தினரான போனி பாண்டியா மற்றும் அவரது மறைந்த தந்தை தீபக்பாய் உடனான சந்திப்பையும் மோடி நினைவு கூர்ந்தார்.

"மறைந்த தீபக்பாயின் ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா 2020 இல் இறந்தார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதும் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ள மோடி, அவரை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியாவின் "மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவர்" என்றும் சுனிதா வில்லியம்ஸுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். பூமிக்கு வரும் பயணம் பாதுகாப்பானதாக அமைய வாழ்த்துவதாகக் கூறி கடிதத்தை முடித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 இல் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் புறப்பட்டனர். 8 நாட்களுக்குப்பின் திரும்ப இருந்த அவர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால் அங்கேயே தங்கினர். செப்டம்பர் 2024 இல், அவர்கள் சென்ற நாசா ஸ்டார்லைனர் விண்கலம் ஆளில்லாமல் பூமிக்குத் திரும்பியது.

இப்போது, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இருவரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலமான டிராகன் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர். இந்தப் பயணத்தை நாசா நேரலையில் ஒளிபரப்புகிறது.

உயிரைப் பணயம் வைக்கும் பயணம்; சுனிதா வில்லியம்ஸின் சம்பளம் எவ்வளவு?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios