41 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரியா செல்லும் இந்தியப் பிரதமர்! வெளிநாட்டு பயணங்களுக்கு ரெடியான மோடி!
"41 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் வெளிநாட்டுப் பயணங்ககள் மேற்கொள்ளத் தயாராகிவிட்டார். ரஷ்யாவுக்குச் சென்று 22வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, ஆஸ்திரியாவுக்கும் செல்ல உள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் முதல் ரஷ்யப் பயணம் இதுவாகும். கடைசியாக, 2019ஆம் ஆண்டு ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டபோதுபிரதமர் ஜூலை 8-9 இல் ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு, ஆஸ்திரியாவுக்கும் செல்கிறார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் ரஷ்யாவிற்கு சென்றிருந்தார்.
இந்தியப் பிரதமருக்கும் ரஷ்யாவின் அதிபருக்கும் இடையிலான வருடாந்திர உச்சிமாநாட்டில் இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவைப் பற்றிய உரையாடல் நடைபெறும். இதுவரை இந்தியாவிலும் ரஷ்யாவிலும் 21 உச்சிமாநாடுகள் மாறி மாறி நடந்துள்ளன.
மார்பக புற்றுநோயால் முடியை வெட்டிய பாலிவுட் நடிகை! மகளின் நிலையைக் கண்டு குமுறும் தாய்!!
இதற்கு முன் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு 2021ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இந்தியா வந்திருந்தார்.
ஆஸ்திரியா பயணம்:
ரஷ்யாவில் இருந்து பிரதமர் ஆஸ்திரியா செல்கிறார். ஜூலை 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஆஸ்திரியாவில் இருப்பார்.
"41 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தில் ஆஸ்திரிய குடியரசுத் தலைவர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் மற்றும் ஆஸ்திரியாவின் அதிபர் கார்ல் நெஹாம்மர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இரு நாட்டுப் பயணித்தின் போது இந்தியப் பிரதமர் அந்நாடுகளில் உள்ள இந்தியர்களைச் சந்தித்து உரையாடுவார் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக் Freedom 125! நாளை அறிமுகம் செய்கிறது பஜாஜ் நிறுவனம்!