கடமை பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையையும் திறந்து வைத்து மரியதை!!
டெல்லியில், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியதை செலுத்தினார்.
டெல்லியில், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியதை செலுத்தினார். நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது தான் சென்ட்ரல் விஸ்டா திட்டம்.
இதையும் படிங்க: நிதி அமைச்சகம் சுறுசுறுப்பு ! 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடக்கம்
டெல்லி ராஜ பாதையில் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறு வடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின், சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் பெயர், கர்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாடை வாங்க தான் டெல்லி சென்றேன்… சர்ச்சையை கிளப்பிய ஹேமந்த் சோரனின் சகோதரர்!!
இப்பாதையின் இரு பக்கங்களிலும் பச்சைபசேலென புல்வெளி, வாகன நிறுத்துமிடம், மக்கள் அமர்ந்து இளைப்பாற நாற்காலிகள், கழிவறைகள், பல்வேறு உணவகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கர்தவ்யா பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அங்கு இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.