உள்ளாடை வாங்க தான் டெல்லி சென்றேன்… சர்ச்சையை கிளப்பிய ஹேமந்த் சோரனின் சகோதரர்!!
உள்ளாடை வாங்கவே டெல்லி சென்றதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்ளாடை வாங்கவே டெல்லி சென்றதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன. ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தமது பெயரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது; அதனை மீறியதால் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இதுக்குறித்து தேர்தல் ஆணையத்திடமும் பாஜக புகார் அளித்தது.
இதையும் படிங்க: அக்டோபர், நவம்பரில் சூரிய, சந்திர கிரகணம்; திருப்பதி கோவிலில் சிறப்பு சேவைகள் ரத்தா?
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், ஆளுநருக்கு சீலிட்ட கவரில் ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும் இது தொடர்பாக ஆளுநர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை தக்க வைக்க உல்லாச பயணங்களுக்கு அழைத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் அண்டை மாநிலமான சத்தீஸ்கருக்கும் அந்த எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் .. இந்திய அளவில் 30வது இடத்தை பிடித்த திரிதேவ் விநாயகா..
பின்னர் ஜார்க்கண்ட் சட்டசபையில் தாமே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரனை வைத்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் அவரது டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பசந்த் சோரன், நான் உள்ளாடைகள் வாங்கவே டெல்லி போனேன் என்று தெரிவித்தார். அவரது இந்த பதில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் பசந்த் சோரனை கடுமையாக விமர்சித்து வருகின்றன.