மகாராஷ்டிரா.. 76000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் - நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
PM Modi : மகாராஷ்டிரா மாநிலத்தில் வத்வான் துறைமுக திட்டத்தை நாளை ஆகஸ்ட் 30ம் தேதி துவங்கி வைக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை 30 ஆகஸ்ட் 2024 அன்று மும்பை மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் பகுதிக்கு வருகை தரவுள்ளார். நாளை காலை 11 மணியளவில், மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 2024ம் ஆண்டுக்கான குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் (GFF) நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். அதன்பின், பிற்பகல் 1:30 மணியளவில், பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.
நாளை 2024 ஆகஸ்ட் 30ம் தேதி பிரதமர் மோடி, வத்வான் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ. 76,000 கோடியாகும். பெரிய கொள்கலன் கொண்ட கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழமான வரைவுகளை வழங்குதல் மற்றும் அதி-பெரிய சரக்குக் கப்பல்களுக்கு இடமளிப்பது போன்ற விஷயங்களால், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் உலகத் தரம் வாய்ந்த கடல் நுழைவாயிலை நிறுவுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எப்போது திருமணம்? மீண்டும் ராகுல்காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்வி.. அவர் சொன்ன பதில்!
பால்கர் மாவட்டத்தில் தஹானு நகருக்கு அருகில் அமைந்துள்ளது தான் வத்வான் துறைமுகம், இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகவும். சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்கும் ஒரு முக்கிய இடம். போக்குவரத்து நேரங்களையும், செலவுகளையும் குறைக்க இது நமது தேசத்திற்கு பெரிதும் உதவும்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த துறைமுகம் ஆழமான பெர்த்கள், திறமையான சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் நவீன துறைமுக மேலாண்மை அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்ல இந்த புதிய துறைமுகமானது குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரதமரின் இந்த மகாராஷ்டிரா வருகையின் போது, நாடு முழுவதும் இத்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், சுமார் ரூ.1,560 கோடி மதிப்பிலான 218 மீன்பிடித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
மீன்பிடித் துறைமுகங்களின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், மீன் இறங்குதுறை மையங்கள் மற்றும் மீன் சந்தைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட முக்கியமான மீன்பிடி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது மீன் மற்றும் கடல் உணவுகளின் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கு தேவையான வசதிகள் மற்றும் சுகாதாரமான நிலைமைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்க எனர்ஜி இன்னும் குறையல; வேலை வாய்ப்பு முகாமில் குவிந்த 60+ முதியவர்கள்