செயற்கை நுண்ணறிவு முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை வரை: பில் கேட்ஸ் - பிரதமர் மோடி கலந்துரையாடல்!
செயற்கை நுண்ணறிவு முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை வரை பல்வேறு துறை சார்ந்து பில்கேட்ஸ் - பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடிய வீடியோ நாளை வெளியாகவுள்ளது
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும், சமூக சேவகருமான பில் கேட்ஸ் அண்மையில் இந்தியா வந்திருந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின்போது, விவசாயம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பரிவர்த்தனை, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்து இருவரும் கலந்துரையாடினர்.
பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு உத்வேகத்தை அளிப்பதாக தெரிவித்திருந்த பில் கேட்ஸ், பொது நலனுக்காக செயற்கை நுண்ணறொவு பற்றி பேசியதாகவும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை தழுவலில் புதுமை; இந்தியாவிலிருந்து உலகிற்கு நாம் எவ்வாறு பாடம் எடுக்க முடியும் ஆகியவை குறித்து பேசியதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பாஜகவில் சீட் மறுப்பு: வருண் காந்தி உருக்கமான கடிதம்!
அதேபோல், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதித்ததில் மகிழ்ச்சியடைந்ததாக பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை வரை பல்வேறு துறை சார்ந்து பில்கேட்ஸ் - பிரதமர் மோடி ஆகியோர் பிரதமர் இல்லத்தில் கலந்துரையாடிய வீடியோ நாளை வெளியாகவுள்ளது. இது தொடர்பான முன்னோட்டம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.