Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்! குஜராத்தில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன.

PM Modi Inaugurates, Sudarshan Setu, India's Longest Cable-Stayed Bridge, in Gujarat sgb
Author
First Published Feb 25, 2024, 9:27 AM IST

குஜராத்தின் துவாரகாவில் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் 'சுதர்ஷன் சேது' பாலம் ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 2.3 கிமீ நீளமுள்ள இந்தப் பாலத்திற்கு 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று கூறினார்.

இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலமுள்ளது. பாலத்தில் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன. சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன.

சரஸ்வதியை மதிக்காத டீச்சருக்கு வேலை கிடையாது! சஸ்பெண்ட் செய்த ராஜஸ்தான் அரசு!

'சிக்னேச்சர் பாலம்' என்று அழைக்கப்பட்ட இந்த பாலம், 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேய்ட் துவாரகா என்பது ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவு. இது துவாரகா நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ளது. அங்கு பகவான் கிருஷ்ணரின் புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோவில் அமைந்துள்ளது.

இன்று பாலத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி துவாரகதீஷ் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்த இருக்கிறார். ராஜ்கோட்டில் குஜராத்தின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (எய்ம்ஸ்) பிரதமர் இன்று மதியம் திறந்து வைக்கிறார்.

ராஜ்கோட் எய்ம்ஸ் தவிர, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். ராஜ்கோட்டில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான எய்மஸ் மருத்துவமனை உட்பட ஐந்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ரூ.6,300 கோடி செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் இன்று மாலை மெகா ரோட்ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'அழகான முகத்தை மறைக்குதே...' பர்தா அணிந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த சென்னை போலீஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios