கொரோனா தொற்று பரவல் காரணமாக அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகின்றன. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு , ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி, 1 முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து உள்ளிட்ட கட்டுபாடுகள் அறிவிக்கபட்டுள்ளது. மேலும், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு அளிக்கபட்டுள்ளதாகவும், ஜனவரி 31ஆம் தேதி வரை கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும் துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Scroll to load tweet…

இதனிடையே, நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது, கடந்த 24 மணி நேரத்தில் 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பித்தக்கது. ஒமைக்ரான் காரணமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசிப்பார் என தெரிகிறது. மேலும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால், கொரோனா பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் நாடு தழுவிய அளவில் ஏதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என கேள்வியும் எழுந்துள்ளது.