Asianet News TamilAsianet News Tamil

நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்... மோடியை புகழ்ந்த அமித் ஷா..!

அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் என வரவேற்று அமித் ஷா டிவிட் செய்துள்ளார்.

PM Modi historic visit to US has given India new aura on world stage
Author
Delhi, First Published Sep 29, 2019, 10:42 AM IST

அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் என வரவேற்று அமித் ஷா டிவிட் செய்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 7 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்  மேற்கொண்டு இருந்தார். ஹூஸ்டனில் ஹவுடி மோடி நிகழ்ச்சி, நியுயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.வின் பருவநிலை உச்சிமாநாடு, பொதுச்சபை கூட்டம் ஆகிய முக்கிய நிகழ்வுகளில் மோடி கலந்து கொண்டார். மேலும், ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்ளிட்ட பல நாடுகளின் அதிபர்களை சந்தித்து பேசினார்.

PM Modi historic visit to US has given India new aura on world stage

பிரதமர் மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மோடியின் வருகையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை வரவேற்று டிவிட்டரில் பதிவு பதிவு செய்து இருந்தார். 

PM Modi historic visit to US has given India new aura on world stage

அதில் அவர் கூறியிருப்பதாவது: வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு திரும்பும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நான் இணைந்து கொள்கிறேன். அவரது வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க பயணம் உலக மேடையில் இந்தியாவுக்கு புதிய ஒளியை  ஏற்றியுள்ளது. இவரது தலைமை புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கம், அதில் நிறைய சாத்தியக் கூறுகள் உள்ளன. அவர் இந்தியா நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த தலைவர் என பதிவு செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios