பிரதமர் மோடி சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் தொலைபேசியில் உரையாடினார். 

சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் இடிபாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் தைரியத்தையும் உறுதியையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். மீட்கப்பட்ட பிறகு மருத்துவக் கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்நலன் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.

முன்னதாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கடந்த 17 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் புதிய உயிர் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் கூட்டுச் செயல்பாட்டுக்கு இந்த பணி முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இவங்கதான் உண்மையான ஹீரோஸ்! மீட்புக் குழுவினரை கட்டித்தழுவி நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!

Scroll to load tweet…

"உத்தரகாசியில் எங்கள் தொழிலாளர் சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்துகிறது." என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அவர்களின் தைரியமும் பொறுமையும் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது என்றும் ஆரோக்கியமாக நலமுடன் வாழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இப்போது அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது என்றும் இந்த சவாலான நேரத்தில் அவர்களின் பொறுமை மற்றும் தைரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் மனிதாபிமானம் மற்றும் குழுப்பணிக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் எடுத்துரைத்துள்ளார். "இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுவாக செயலாற்றுவது எப்படி என்பதற்கு ஓர் அற்புதமான உதாரணத்தை வழங்கியுள்ளனர்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

மெட்ராஸ் சேப்பர்ஸ் யாரு? சுரங்க மீட்புப் பணியில் களமிறங்கிய படையின் பின்னணி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D