தென்னாப்பிரிக்க அதிபர் மற்றும் முதல் பெண்மணிக்கு பிரதமர் மோடி நினைவு பரிசுகளை வழங்கியுள்ளார்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15ஆவது பிரிக்ஸ் மாநாடு கடந்த 22ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். மாநாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக கிரீஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் மேலும் பல நாடுகள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அர்ஜென்டினா, எதியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை இணைத்து பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபருடன் சிறிது நேரம் பேசிய பிரதமர் மோடி!

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் மற்றும் முதல் பெண்மணிக்கு பிரதமர் மோடி நினைவு பரிசுகளை வழங்கியுள்ளார். அதன்படி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கு தெலங்கானா மாநிலம் சுராஹியைச் சேர்ந்த பித்ரி கலைஞர்கள் செய்த குவளைகளையும், முதல் பெண்மணிக்கு நாகாலந்து சால்வைகளையும் பிரதமர் மோடி நினைவு பரிசாக வழங்கினார். துத்தநாகம், தாமிரம் மற்றும் பிற இரும்பு அல்லாத உலோகங்களின் கலவையுடன் பித்ரிவாஸ் வார்க்கப்படுகிறது. இது 500 ஆண்டுகள் பழமையானது.

Scroll to load tweet…

அதேபோல், பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுக்கு மத்தியப் பிரதேசத்தின் கோண்ட் ஓவியத்தை பிரதமர் மோடி நினைவு பரிசாக வழங்கினார். கோண்ட் ஓவியங்கள் பழங்குடியினரின் மிகவும் போற்றப்படும் கலை வடிவங்களில் ஒன்றாகும். ‘கோண்ட்’ என்ற சொல் திராவிட வெளிப்பாடான ‘கோண்ட்’ என்பதிலிருந்து வந்தது, அதாவது ‘பச்சை மலை’ என்பது இதன் பொருளாகும்.

Scroll to load tweet…

புள்ளிகள் மற்றும் கோடுகளால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்கள், கோண்ட்ஸின் சுவர்கள் மற்றும் தளங்களில் சித்திரக் கலையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. ள்நாட்டில் கிடைக்கும் இயற்கை வண்ணங்கள் மற்றும் கரி, வண்ணம் போன்ற பொருட்கள். மண், தாவர சாறு, இலைகள், மாட்டு சாணம், சுண்ணாம்பு கல் தூள் போன்றவற்றால் இவை வரையப்படுகின்றன.