தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
தமிழ்நாட்டில் சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயங்குவதற்காக இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் தமிழ்நாட்டின் ரயில் இணைப்பை மேம்படுத்துவதோடு, பயணிகளுக்கு வசதியான மற்றும் விரைவான பயண அனுபவத்தை வழங்கும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கூடுதலாக 2 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று 3 வந்தே பாரத் ரயிலக்ளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோயில், மீரட் – லக்னோ ஆகிய வழித்தடங்களில் இந்த புதிய ரயில்கள் தொடங்கப்பட்டன. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய மோடி, 2047-க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அடைய தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி முக்கியமானது என்று கூறினார். தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தென் மாநிலங்களில் ரயில் போக்குவரத்து வலுப்பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டிற்குள் 726 கி.மீ தூரம் பயணிக்கிறது. இது இயற்கை எழில் கொஞ்சும் நாகர்கோயிலை சென்னையுடன் இணைக்கும் முதல் வந்தே பாரத் சேவையாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 12 மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இது விரைவான பயண அனுபவத்தை வழங்கும். ரயில் எண். 20627 சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:00 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். ரயில் எண் 20628 நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
வான்படையில் எதிரிகளை திணற விடும் போர் விமானங்கள்!!
இது நாகர்கோவில் சந்திப்பை அடைவதற்கு முன்பு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். செவ்வாய் கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும்.
மதுரை-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இந்த ரைல் மதுரையில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிறுத்தப்படும்.
கட்டண விவரம்
சென்னை எழும்பூரில் இருந்து நாகர் கோயில் செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க ஏசி கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூ.1760, எக்ஸிக்யூட்டிங் சேர் கோச்சில் பயணிக்க ஒருவருக்கு ரூ.3240 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க ஏசி சேர் கார் கோச்சில் பயனிக்க ரூ.2865 கட்டணமும், எக்ஸிக்யூட்டிவ் சேர் கோச்சில் பயணிக்க் ரூ.3060 என்ற கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரயில் 18 என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக நவீன ரயிலாகும். இந்தியா அதிவேக இரயில் வலையமைப்பை நோக்கி அடியெடுத்து வைக்கும் நோக்கில் இது பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது. நவீன வசதிகள் வசதிகளுடன் இயக்கப்படும்., இந்த ரயில்கள் இந்தியா முழுவதும் பயணிக்க வசதியான மற்றும் வசதியான வழியை வழங்குகிறது.