ரூ.850 கோடி மதிப்பிலான மகா காளேஸ்வரர் சிவன் கோவில்… நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் புகழ்பெற்ற சிவன் கோவிலான மகா காளேஸ்வரர் கோவிலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் புகழ்பெற்ற சிவன் கோவிலான மகா காளேஸ்வரர் கோவிலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் புகழ்பெற்ற சிவன் கோவிலான மகா காளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. இதை காண நாடு முழுவதிலும் இருந்து பல மக்கள் இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இதையும் படிங்க: 20 கோடி சொத்தை மருத்துவமனைக்கு எழுதி வைத்த பெண்மணி.. நெகிழ்ச்சி சம்பவம்
இதனால் அந்த கோயில் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. மேலும் இந்த மகா காளேஸ்வரர் கோவிலை புணரமைப்பதற்கான பணிகள் ரூ.316 கோடி மதிப்பில் தொடங்கி துரிதமாய் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கோவில் வளாகம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 92% அதிகரித்த இந்திய ரயில்வேயின் வருவாய்… ரூ.17,394 கோடியில் இருந்து ரூ.33,476 கோடியாக அதிகரிப்பு!!
இந்த திருப்பணிகள் நிறைவடைந்த பகுதிகளை முதற்கட்டமாக இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். அவருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் உடன் இருந்தனர். முன்னதாக பாரம்பரிய வேட்டியுடன் மகாகாள் கோயில் கருவறைக்குள் நுழைந்த பிரதமர் மோடி அங்குள்ள லிங்கத்தின் முன்பு உட்கார்ந்து பூஜை செய்தார்.