20 கோடி சொத்தை மருத்துவமனைக்கு எழுதி வைத்த பெண்மணி.. நெகிழ்ச்சி சம்பவம்
ஆந்திராவில் அரசு பொது மருத்துவமனைக்கு என்.ஆர்.ஐ மருத்துவர் தனது 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், குண்டூரைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்தான் உமா தேவி. இவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் தன்னுடைய மருத்துவப் படிப்பை 1965-ம் ஆண்டு முடித்தார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கேயே வேலை செய்து செட்டிலானார்.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அங்கு இம்யூனாலஜி நிபுணராகவும், ஒவ்வாமை நிபுணராகவும் தற்போது பணியாற்றி வருகிறார். குண்டூர் மருத்துவக் கல்லூரியின் 17வது ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் ரீயூனியன் கூட்டம் ( டல்லாஸில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உமா தேவி, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதையும் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக
3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தன்னுடைய கணவர் கனூரி ராமச்சந்திர ராவ் பெயரை வைக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு குழந்தைகள் இல்லை. தன்னுடைய முழு சொத்தையும் மருத்துவமனைக்குக் கொடுத்துள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக