டெல்லியில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த காங்கிரசை சேர்ந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஹரிபிரசாத் நிறுத்தப்பட்டார். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகளே கிடைத்தது. இதில் அ.தி.மு.க.வின் 13 எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.