பிரதமர் நரேந்திர மோடி, தனது வருடாந்திர பாரம்பரியத்தை பின்பற்றி, இம்முறை கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
இன்று நாடு முழுவதும் தீபாவளி உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் போல, பிரதமர் நரேந்திர மோடி இம்முறையும் தீபாவளி பண்டிகையை நமது வீரர்களுடன் கொண்டாடும் பாரம்பரியத்தை தொடர்ந்தார்.
இந்த முறை அவர் கோவா மற்றும் கார்வார் கடற்கரையில் அமைந்துள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அங்கு அவர் அதிகாரிகளையும் கடற்படை வீரர்களையும் நேரில் சந்தித்து, அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது உரையில், “இன்றைய நாள் எனக்கு மிகவும் சிறப்பானது மற்றும் மறக்க முடியாதது. ஒருபுறம் பரந்த கடல், மறுபுறம் பாரத மாதாவின் தைரியமான புதல்வர்கள். இதைவிட பெருமை எதுவும் இல்லை” எனக் கூறினார் நாட்டின் பாதுகாப்பிற்காக விழித்திருக்கும் நம் வீரர்களே இந்தியாவின் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என் முன்னே எல்லையற்ற வானமும், அதன் கீழ் இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்தும் ஐஎன்எஸ் விக்ராந்தும் உள்ளது. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் நம் வீரர்களின் தைரியத்தையும் பிரகாசத்தையும் நினைவூட்டுகிறது,” எனக் கூறி வீரர்களைப் பாராட்டினார். மேலும் இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி, ”இந்த புனித தீபாவளியை கடற்படை வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது தனது வாழ்க்கையின் பெருமைமிகு தருணம்.

இந்தியாவின் பாதுகாப்புக்காக கடல் எல்லைகளில் கண்மூடி பணியாற்றும் வீரர்களுடன் நேரம் செலவிடுவது தனக்கு ஒரு ஆழ்ந்த அனுபவமாக இருந்தது என்று அவர் கூறினார். ஐஎன்எஸ் விக்ராந்தில் அவர்கள் கடந்த இரவை நினைவுகூர்ந்த பிரதமர், “அந்த இரவு என் நினைவில் என்றும் நிற்கும். வீரர்களின் உற்சாகம், ஆற்றல், தேசபக்தி அனைத்தும் எனக்கு பேரானந்தம் அளித்தது” என்றார்.
அவர்கள் பாடிய தேசபக்தி பாடல்கள், “ஆபரேஷன் சிந்தூர்” குறித்த உரையாடல்களும் அங்கு இருந்த அனைவரின் மனதையும் உலுக்கியதாகவும் அவர் கூறினார். முடிவில் பிரதமர் மோடி, “இந்தியாவின் கடற்படை வீரர்கள் நம் தேசத்தின் கவசம்.அவர்களுக்கு அர்ப்பணிப்பு, தைரியம், நாட்டுப்பற்றின் வெளிப்பாடாகும். தீபாவளியை கொண்டாடுவது ஒரு ஆசீர்வாதம் போல உள்ளது,” எனக் கூறி, வீரர்களின் வீரர்களின் சேவைக்குப் பெருமை தெரிவித்தார்.
