ஜெய்ப்பூரில் டீ கடைக்கு சென்ற பிரதமர் மோடி, யுபிஐ பயன்படுத்தி பேமெண்ட் கட்டிய பிரான்ஸ் அதிபர்!

நாட்டின் 75ஆவது குடியரசுத் தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபரான இம்மானுவேல் மேக்ரான் நேற்று இந்தியா வந்தார்.

PM Modi and French President Emmanuel Macron visited Tea Shop at Jaipur and Macron used UPI to make a payment rsk

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு 75ஆவது குடியரசுத் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் தான் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக நேற்று இந்தியா வந்தார். தனி விமானம் மூலமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தார். அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராஜஸ்தான் ஆல்ளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் வரவேற்றனர்.

தெலுங்கானாவில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

அதன் பிறகு ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை முதலில் பார்வையிட்ட மேக்ரான் அதன் பின், அங்கு நடந்த கலாச்சார நிகழ்ச்சி, கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்த்து வியந்தார். இதையடுத்து, ஜந்தர் மந்தரில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார். இந்த நிலையில் தான் ஜெய்ப்பூரில் உள்ள டீ கடைக்கு இருவரும் சென்று டீ குடித்தனர். பின்னர் டீக்கான காசை யுபிஐ பயன்படுத்தி மேக்ரான் செலுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kartavya Path, 75th Republic Day: முதல் முறையாக கர்தவ்ய பாதையில் 100 பெண் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios