செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆண்டுதோறும் குடியரசுத் தினம் உற்சாகமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டின் 75ஆவது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு மாநில முதல்வர், ஆளுநர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ராணுவம், விமானம் மற்றும் கப்பல் என்று முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் தான் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Kartavya Path, 75th Republic Day: முதல் முறையாக கர்தவ்ய பாதையில் 100 பெண் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி!
பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கலைத்துறை சாதனையாளர்கள் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி, பரத நாட்டியக் கலைஞர்கள வைஜெயந்திமாலா பாலி, பத்மா சுப்பிரமணியம், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள தனது திரைப்படங்களின் மூலம் தேசப்பற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து கலைத்துறையில் சாதனை புரிந்த சகோதரர் விஜயகாந்த், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்ட கிராமிய நடனக் கலைஞர் பத்ரப்பன், தமிழ் இலக்கிய சாதனையாளர் ஜோ டி குரூஸ், மருத்துவத் துறை சாதனையாளர் நாச்சியார், கலைத்துறை சாதனையாளர் சேஷம்பட்டி சிவலிங்கம், விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா மற்றும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
குடியரசு தின அணிவகுப்பு 2024: மகளிர் சக்தியை காட்சிப்படுத்தும் டிஆர்டிஓ!
