தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து இந்தியாவை மீட்க மன்மோகன் சிங் ஒருவரால் மட்டுமே முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, திகார் சிறையில் இருந்தாலும் அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிராக தமது குடும்பத்தினர் மூலமாக டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறியும், அவரை புகழ்ந்தும் ப.சிதம்பரம் சார்பில் கருத்து பதிவிடப்பட்டது. 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ப.சிதம்பரம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார். மேலும், பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை கேட்டுகுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் சரியான வழியை ஒருவரால் காட்ட முடியும் என்றால், அது மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும். பொருளாதார சரிவிற்கான முக்கியமான காரணம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அரசு செயல்பாடுகளில் இருக்கும் அடிப்படை தவறு எனவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.