மக்களின் நல்ல செயல்களை கொண்டாட வேண்டும்.. 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
2014-ல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி தனது முதல் `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
பிரதமர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களில் ஒலிபரப்பாகி வருகிறது.
100வது எபிசோட் ஒலிபரப்பாவதை முன்னிட்டு மன் கி பாத் கருத்தரங்குக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்தது. 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நேர்மறை கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கான மிகச்சிறந்த முறையில் இந்த நிகழ்ச்சி உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சி மக்களின் நல்ல செயல்களைக் கொண்டாடக் கூடியதாக உள்ளது.
100வது நிகழ்ச்சியை எட்டியதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு முன் உங்கள் நாட்டில் உள்ள குறைந்தது 15 சுற்றுலா தலங்களையாவது சென்று பார்க்க வேண்டும் என்றும், இந்த இடங்கள் உங்கள் மாநிலத்தில் இருக்கக்கூடாது, வேறு மாநிலத்தில் இருக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் கூறுவேன்.
இது சுற்றுலாத்துறைக்கு பெரிதும் உதவும். சுற்றுலாவில் தூய்மையுடன், இன்க்ரெடிபிள் இந்தியா இயக்கம் குறித்தும் பலமுறை விவாதித்துள்ளோம். இந்த இயக்கத்தின் காரணமாக மக்கள் முதன்முறையாக தங்களைச் சுற்றியுள்ள பல இடங்களைப் பற்றி அறிந்து கொண்டனர்.
நண்பர்களே, நாட்டில் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆறுகள், மலைகள், ஏரிகள் நமது இயற்கை ஆதாரங்களானாலும் சரி, புண்ணியத் தலங்களாயினும் சரி, அவற்றை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!
இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!