22 ஜனவரி 2024 அன்று அயோத்தியின் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான அழைப்பை ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா குழுவிடம் இருந்து ஏற்றுக்கொண்டார்.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2020ல் அரசு சார்பில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறக்கட்டளை தான் ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்துள்ளார். அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக உத்திர பிரதோச அரசு அறிவித்துள்ளது.
இதனால் கோவிலின் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அழைப்பை ஏற்றுக்கொண்டார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22 ஜனவரி 2024 அன்று நடைபெறும். இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இன்று உணர்வுகள் நிறைந்த நாள். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு அவர் என்னை அழைத்துள்ளனர். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
என் வாழ்நாளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நான் காண்பது எனது அதிர்ஷ்டம்" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஏசியாநெட் செய்தி வெளியிட்ட செய்தியின்படி, ராம பிரான் பிரதிஷ்டை ஜனவரி 14-24 க்கு இடையில் நடக்கும் என்று ஆகஸ்ட் மாதத்தில் முதலில் தெரிவித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் பயணம் செய்யும் போது மதுபானத்தை எடுத்து செல்லலாமா.? ரயில்வே வெளியிட்ட புது விதிகள்..
