பழங்குடியின சமூகத் தலைவர்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பழங்குடியின சமூகத் தலைவர்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் நடத்தினார்.

PM interacts with delegation of community leaders of various tribes of Arunachal Pradesh

பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில்  அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பழங்குடியின சமூகத் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன், அருணாச்சல பிரதேசம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் எவ்வாறு பெரிய அளவில் முன்னேறி வருகிறது என்பது குறித்தும் பேசினர்.

சமீபத்தில் அவர்கள் குஜராத் மாநிலத்தின் கெவாடியா மற்றும் கிஃப்ட் நகரங்களுக்கு சென்ற அனுபவத்தைப் பற்றிக் கேட்டறிந்தார். அருணாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் இடையே உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளையும் அவர்களுடன் விவாதித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பேமா காண்டுவும் இந்தச் சந்திப்பில் உடன் இருந்தார்.

மத்திய அரசின் ஆதரவுடன் அசாம் - அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை போன்ற நிலுவையில் உள்ள பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். பழங்குடியின பிரதிநிதிகள் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தெரிவித்தார்.

கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராய மரணங்கள்! தமிழகத்தில் தொடரும் அவலம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios