339 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.
339 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். பின்னர் கோவில் வளாக பணியில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் மீது மலர்களை தூவி பிரதமர் மரியாதை செய்ததோடு, அவர்களுடன் மதிய உணவு அருந்தினார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார். 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்புக்கு ஆலய வளாக விரிவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. கங்கை படித்துரை வழியாக நேரடியாக ஆலயத்திற்கு வரும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர்அகலமும் கொண்ட நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், யாத்ரீகர்களுக்கான மையம் உள்ளிட்டமேம்பாட்டுப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டள்ளன.

இந்நிலையில் முதற்கட்ட பணிகள் 339 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். பின்னர் கோவில் வளாக பணியில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் மீது மலர்களை தூவி பிரதமர் மரியாதை செய்தார். பின்னர் அவர்களுடன் மதிய உணவு அருந்தினார். அந்த தொழிலாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அன்னிய படையெடுப்பாளர்கள் இந்த நகரத்தைத் தாக்கினர், அதை அழிக்க முயன்றனர். மொகலாய மன்னர் ஔரங்கசீப் நமது நாகரீகத்தை வாளால் மாற்ற முயன்றவர். நமது கலாச்சாரத்தை நசுக்க முயன்றவர். கொடுங்கோலர்கள் வாரணாசியை அழிக்க முயன்றனர், ஆனால் அதுவே அவர்களின் வீழ்ச்சியாக அமைந்தது. இந்த நாட்டின் மண் மற்ற உலக நாடுகளிலிருந்து வேறுபட்டது. புதிய இந்தியா அதன் கலாச்சாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறது மற்றும் அதன் திறன் மீது நம்பிக்கையும் கொண்டுள்ளது.

நான் உங்கள் முன்னால் முன்று தீர்மானங்களை முன் வைக்கிறேன். அது உங்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டிற்கும் சேர்த்துத்தான். தூய்மை, புதியன உருவாக்குதல் மற்றும் கண்டறிதலுடன், தொடர் முயற்சியும் சேர்ந்தால் சுயசார்புள்ள இந்தியா உருவாகும். காசி விஸ்வநாதர் கோவிலில் இந்த பெரிய வளாகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்தில் இந்த பணி நிற்காமல் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். பின்னர், காசி விஸ்வநாதர் கோவிலை கங்கை நதியுடன் இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அவருடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உடன் சென்றார்.
