Asianet News TamilAsianet News Tamil

சக்தி ஸ்வரூபா... சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட பாஜக வேட்பாளருடன் உரையாடிய பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தின் பாசிர்ஹட் தொகுதி பாஜக வேட்பாளரும் சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருமான ரேகா பத்ராவுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

PM called Rekha Patra, BJP candidate from Basirhat and one of the Sandeshkhali victims sgb
Author
First Published Mar 26, 2024, 5:43 PM IST

மேற்கு வங்கத்தின் பாசிர்ஹட் தொகுதி பாஜக வேட்பாளரும் சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருமான ரேகா பத்ராவுடன் பிரதமர் மோடி உரையாடினார். பிரச்சார ஏற்பாடுகள் மற்றும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்து பேசினார். பிரதமர் அவரை 'சக்தி ஸ்வரூபா' என்று வாழ்த்தினார்.

உரையாடலின்போது சந்தேஷ்காலியில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து ரேகா பத்ரா விவரிவாக பிரதமரிடம் எடுத்துத்தார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அவர்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க போலீசார் இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 2 பேரைக் கைது செய்துள்ளனர். பாஜக இந்து விவகாரத்தைச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துடன் பாசிர்ஹத் மக்களவைத் தொகுதியில் ரேகா பத்ராவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

சூரிய காந்தப்புல மாற்றத்தால் பூமியைத் தாக்கும் வலிமையான புவி காந்தப் புயல்! விளைவு என்ன?

இந்நிலையில், பிரதமர் மோடி சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுடன் இன்று போனிலப் உரையாடியுள்ளார். அவர் ரேகா பத்ராவுடன் சுமார் 6 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.

இது குறித்து ரேகா கூறுகையில், மோடியின் ஆசி இருப்பதால் தேர்தலில் வெற்றி அடைவது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், சந்தேஷ்காலியில் தங்களுக்கு நடந்தது சொல்ல முடியாத சித்திரவதை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தன்னை சக்தி ஸ்வரூபா என்று கூறி வாழ்த்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்த பிஎஸ்எல்வி போயம்-3! இன்னொரு மைல்கல்லை எட்டிய இஸ்ரோ!

Follow Us:
Download App:
  • android
  • ios