நான்கு நாள் காத்திருப்பு.. பிரான்சில் பகீர் கிளப்பிய ஆள் கடத்தல் சர்ச்சை - பத்திரமாக இந்தியா வந்த 276 பயணிகள்!
Human Trafficking : ஆள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பிரான்சில் நான்கு நாள் காவலில் வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, 276 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் ஏ340 விமானம், இன்று அதிகாலை மும்பையில் தரையிறங்கியது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி பயணம் செய்தது லெஜெண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான A340 விமானம். இந்த விமானத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது. இந்த சூழலில் பாரிஸில் இருந்து கிழக்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் உடனடியாக அந்த விமானம் தரையிறங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த கட்டளை ஏன் இடப்பட்டது என்று தெரிய வந்தபொழுது தான் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஹியூமன் டிராபிக் எனப்படும் ஆள்கடத்தல் சம்பந்தமாக பலர் அந்த விமானத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் 21ஆம் தேதி டிசம்பர் அன்று புறப்பட்ட அந்த விமானம் பாரிஸுக்கு அருகில் உள்ள ஒரு விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சோதனைக்காக தரையிறக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு!
பொதுவாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்காக பலர் தீவிரமாக முயற்சிக்கும் நிலையில், இது போன்ற சில சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைய ஆவணம் செய்பவர்களின் பலர் இந்தியர்கள் என்கின்ற தகவலும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிக அளவில் இந்தியர்களுடன் பயணித்த அந்த விமானத்தின் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கடந்த 22 ஆம் தேதி அவசர அவசரமாக அந்த விமானம் தரையெடுக்கப்பட்ட நிலையில், சுமார் 4 நாட்கள் நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு அவர்கள் தற்பொழுது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை Vatryல் தரையிறங்கியபோது, 303 பயணிகளில் 11 சிறார்களும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நான்கு நாள் நடந்த சோதனையின் போது, சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு தற்காலிக படுக்கைகள், கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளுக்கான அணுகல் மற்றும் உணவு, சூடான பானங்களுடன் வத்ரி விமான நிலைய ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.