Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு டெல்லி அரசு  ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது

Delhi govt employee who succumbed to COVID19 gets rs 1 crore compensation
Author
First Published Dec 25, 2023, 11:32 PM IST

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. முன்னதாக, 2019ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

 

 

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு டெல்லி அரசு  ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த அனில் குமார் கர்க்கின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்த டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த், கவுரவத் தொகையாக ரூ.1 கோடி காசோலையை வழங்கினார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனில் குமார் கர்க்கின் பங்களிப்பை நினைவுகூர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த், டெல்லி போக்குவரத்து கழகத்தில் மேலாளராக 36 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றியதை ஒருபோதும் மறக்க முடியாது என்றார்.

இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ் குமார்!

கொரோனா பாதிக்கப்பட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி உயிரிழந்த அனில் குமார் கர்க்கிற்கு பபிதா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். கோவிட்19 தொற்றுநோய்களின் போது உயிரிழந்த முன்னணி களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் கூறினார். “கெஜ்ரிவால் அரசாங்கம் ஒவ்வொரு கொரோனா போர்வீரர்களாலும் உறுதியாக நிற்கிறது. சவாலான காலங்களில் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளது.” என அவர் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios