Asianet News TamilAsianet News Tamil

இப்படி செய்தால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 55 ரூபாயாக குறைக்கலாம்... மத்திய அமைச்சரின் அதிரடி ஐடியா!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 55 ஆக குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். எத்தனால் உற்பத்தி ஆலைகளை அமைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாயாக குறையும் என்று நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

Petrol price up to Rs. 55 Will be reduced
Author
Delhi, First Published Sep 11, 2018, 7:16 AM IST

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 55 ஆக குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். எத்தனால் உற்பத்தி ஆலைகளை அமைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாயாக குறையும் என்று நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.Petrol price up to Rs. 55 Will be reduced

சத்தீஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பெட்ரோலியத்துறை அமைச்சகம் எத்தனால் உற்பத்திக்காக 5 ஆலைகளை அமைத்து வருகிறது என்றார். மரக்கழிவுகள் மற்றும் மாநகர குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரிக்க உள்ளதாகவும், இதனால் டீசல் விலை லிட்டருக்கு 50 ரூபாயாக குறையு என தகவல் தெரிவித்துள்ளார். Petrol price up to Rs. 55 Will be reduced

பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாயாக குறையும் என்ற அவர், ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்றார். எத்தனாலை பெட்ரோல், டீசலுடன் கலந்து உபயோகிப்பதால் அரசுக்கு பணம் மிச்சமாகும் என்றும் கட்கரி தெரிவித்தார்.

Petrol price up to Rs. 55 Will be reduced

மேலும் எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் டீசலை தயாரிப்பதற்காக 5 இடங்களில் ஆலைகளை எண்ணை நிறுவனங்கள் அமைத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் பெட்ரோல் விலை 55 ரூபாயுக்கும், டீசல் 50 ரூபாயுக்கும் கிடைக்கும் என்று கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios