petrol price hike everyday
பெட்ரோல்-டீசல் தினசரி விலை நிர்ணய முறை, புதுச்சேரியில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதன்படி 15 நாட்களுக்கு ஒருமுறை ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை நடந்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரீட்சார்த்த முயற்சியாக புதுச்சேரி, சண்டிகர், ஜாம்ஷெட்பூர், உதய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
மே 1-ந் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, புதுச்சேரியில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறைப்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மே 1-க்கான மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை விலை ரூ.66.05.
மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை ரூ.58.70.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விலை ரூ.66.02.
மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை: ரூ.58.68.
பாரத் பெட்ரோலிடம் நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் விலை ரூ.66.02.
மாற்றியமைக்கப்பட்ட டீசல் விலை: ரூ.58.68.
பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்தவிலைப்படிதான் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
